"வந்தவினையும், வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என திருநீரு
அணிவோர்க்கு மேவ வாராதே வினை..."
தைப்பூசம் வழிபாடு - சிறப்பு தகவல்கள்,
●தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
◆பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தி ல் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபா டுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
◆தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
◆இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்து க்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
◆சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.
◆தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினை த்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்தி ருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
◆முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மை யானதாக கருதப்படுகிறது.
◆தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
◆தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
◆தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழி பாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
◆சூரனை அழிக்க பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலா க மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
◆தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரின ங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
◆தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷே க ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
◆தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆன ந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்ச லி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்க ளும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்க ளும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
◆முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமே தராக தைப்பூச நாளில் காட்சியளித்தாராம்.
◆தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவுஉண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜை யில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
◆நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
◆இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயு தத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.
◆மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரி லிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத் தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முரு கன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
◆திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரை யில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூச த்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழா க்கோலம் காணும்.
◆சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவே ல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.
◆எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக் கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.
◆சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின் றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப் பூசத்தன்று பஜனை பாடலாக வள்ளி மலையி ல் பக்தர்கள் பாடுகின்றனர்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
அன்பே சிவம் .. !!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'