பிள்ளையாருக்கு மோதகத்தை படைத்து வழிபடுவர். அதற்கு ஒரு தத்துவ விளக்கம் சொல்வர்.
மோதகம் வெளியே மாவினாலும், உள்ளே சர்க்கரை, பயறு, தேங்காய் துருவல் கலந்த பூரணத்தினாலும் ஆனது.
சர்க்கரை, பயறு, தேங்காய் துருவல் என்பன மாவை விட்டு வெளியேறியதும் நாவிற்கு மிகவும் இனிமையாக , சுவையாக இன்பத்தைத் தருவது போல , முத்தியை விரும்பும் உயிர் மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் இறைவனை வழிபட, உடலை விட்டுப் பிரிந்த உயிர் இறைவனின் திருவடியில் பேரின்பத்தை அனுபவிக்கும்.
நாங்கள் மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் இறைவனை வழிபட வேண்டும் என்பதையும், அப்படி வணங்கினால் தான் முத்தி அடையலாம் என்பதையும் விளக்குவதற்காகவே மோதகம் படைக்கப் படுகின்றது.
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழ
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த சேக்கிழார் சுவாமிகள் புராணம்