Friday, April 4, 2014

சுப நிகழ்ச்சிகளை செய்ய உகந்த தினம்

உத்தராயணத்தில் வரும் முதல் வளர்பிறை சப்தமி, ரத சப்தமி எனப்படும். அது சூரியனுக்கு உகந்த நன்னாளாகும். அன்றைய தினம் ஆன்மிக, யோகப் பயிற்சிகளை தொடங்குதல், வித்யாரம்பம், குலதெய்வ வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு என்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளை செய்ய மிகவும் உகந்ததாகும். 


அன்றைய தினம் அதிகாலையில் குளிக்கும்போது 2 அல்லது 7 வெள்ளெருக்கு இலைகளை ஒரு சிறிது அட்சதையோடு, நமது தலையிலும், தோள்களிலும் வைத்து கிழக்கு முகமாக நின்று குளிப்பதன் மூலம் சூரியக் கதிர்வீச்சின் சாதகமான பலன்களை பெற்று மகிழலாம். 

அரிக்க தேவன் என்று அழைக்கப்படும் சூரிய பகவானின் விஷேசமான நன்மையைப் பெற்ற ஒரு தாவரமே வெள்ளெருக்கு செடியாகும். வருடக்கணக்கில் தண்ணீர் இல்லாமல் இருந்தாலும் கூட அது பூப்பதும், பின் காய்ப்பதும் எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. 

அதன் இலைகளின் அமைப்பும், மேற்புறமும், நரம்புகளும் சூரிய ஒளியிலிருந்தே தமக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெறும் வகையில் அமைந்துள்ளன. ஒளிவடிவச் சூரியக் கதிர்களை உயிர் வடிவின் வெளிப்பாடாக மாற்றியமைப்பதன் காரணமாகவே மருத்துவ குணம் கொண்ட வெள்ளெருக்கு நமது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது.