Friday, October 9, 2015

திருவெண்காட்டில் உலகிலுள்ள அனைத்து ஐீவராசிகளும் உய்வுபெற சனி மகா பிரதோஷ வழிபாடு ! ! ! 10.10.2015




லகில் உள்ள அனைத்து ஜீவன்களும் உய்வுபெற வேண்டி நஞ்சுண்டகண்டனுக்கு நன்றி செலுத்தும் வழிபாடே பிரதோஷ வழிபாடு, மற்ற பிரதோஷதை காட்டிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படும் காரணம் பிரதோஷ நிகழ்வு நடைபெற்ற நாள் சனிக்கிழமை அதனால் மற்ற பிரதோஷ வழிபாட்டையும் விட மஹா பிரதோஷம் மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது.



மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்

 யாழ்ப்பாணம் - இலங்கை

பொற்சபை (பொன்னம்பலம்)


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

எதற்கு ஈசனுக்கு நன்றி சொல்லவேண்டும் ? 

நாம் தேவர்களை, அசுரர்களை, பாற்கடலை, வாசுகி பாம்பை, என்று முன்னோர்கள் சொன்ன நிகழ்வு உண்மையா என்று பார்க்காமல் எதற்கு நன்றி சொல்லவேண்டும். 

நமது வாழ்க்கையில் நாம் அனுபவிப்பது அனைத்தும் ஈசன் நமக்கு அருளியது தானே, அப்படி என்ன அருளிவிட்டார்,  இல்லாததை வேண்டி கொண்டு இருபவனுக்கு, இருபதின் அருமை தெரியவில்லை, 

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 யாழ்ப்பாணம் - இலங்கை

ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.


ஈசன் அருளியதை பார்போம் !

  • நல்ல வேலைசெய்யும் உடலுறுப்புகள், 

  • முன்றுவேளையும் உண்ணும் உணவு, 

  • மானத்தை காக்கும் நல்ல உடை, 

  • இருக்க ஒரு நல்ல இடம், 

  • நம்மை மற்றவர்கள் மதிக்கும்படி ஒரு நிலை, 

  • நம் மீது அக்கறைகொண்ட நல்ல அம்மா, 

  • நம் மீது அக்கறைகொண்ட நல்ல அப்பா, 

  • நாம் மீது அக்கறைகொண்ட நல்ல உறவுகள், 

  • நம் மீது அக்கறைகொண்ட நல்ல நண்பர்கள், 

  • நம் மீது அக்கறைகொண்ட நல்ல குழந்தைகள், 

  • நம் மீது அக்கறைகொண்ட நல்ல மனைவி, 

  • நம் மீது அக்கறைகொண்ட நல்ல குடும்பம், 

  • நம் அன்புகாட்டும் உற்றார். 

  • நமது தேவையை நமக்கு முன் அறிந்து அருளும் கருணை,

  • நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் உடன் இருந்து காக்கும் கருணை,

  • இவையெல்லாம் விட தமிழில் அழைத்தபோது எல்லாம் நேரில் வந்து காட்சிகொடுத்த ஈசனின் சொந்தநாடான தமிழ் மொழி பேசும் தென்னாடு என்ற தமிழ்நாட்டில் நம்மை தமிழ்பேசும்படி பிறக்கவைத்த கருணை,

இன்னும் எவ்வளவு என்று சொல்லமுடியாத கருணை வழங்கி காக்கும் அன்பு கடவுள் ஈசனுக்கு நன்றி சொல்லும் பிரதோஷ வழிபாட்டை உணர்ந்து மேற்கொண்டு, 

பெற்றதற்கு நன்றியுடன் நாளை சிவ மஹா பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டுகிறோம்.



சகல பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''