
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைதேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டதும் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
திருமால், பிரம்மன், தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)

திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.
அன்னை பார்வதி சிவபெருமானின் கழுத்தில் தன்கைகளால் தடவிய போது கொடிய விஷம் அமுதாக மாறியது. சிவபெருமான் "திருநீல கண்டர்' ஆனார்.
"சனி பிரதோஷம்"
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்

திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.
"பிரதோஷ காலம்"
பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.
"பிரதோஷ தரிசனம்"
வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.

"பிரதோஷ வகைகள்"
பிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.
நித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.
பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.
மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.
மகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.
பிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.
சகல தோஷங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''