Saturday, October 1, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் அஷ்ட ஐஸ்வரியமும் சகல ஞானமும் தரவல்ல நவராத்திர விரத வழிபாடு 01.10.2016 - 10.10.2016


முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. நவமி 10ம் தேதி முன்னிரவில் முடிவடைகிறது.

விரதம் இன்று 01ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படும். பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும் செய்யப்படுகின்றது.

சரஸ்வதிக்குரிய நாள் மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுபெறுகின்றது.

நவராத்திரி பூஜை தொடக்கம்: 

புரட்டாசி 15 - அக்டோபர் 1 சனிக்கிழமை 
காலை 06-00 முதல் 09-00 வரை 
பகல் 10-30 முதல் 01-30 வரை

ஆயுத பூஜை - சரஸ்வதி சாமி கும்பிட நல்ல நேரம் : 

அக்டோபர் 10 திங்கள் கிழமை 
பகல் 12-00 முதல் 02-00 வரை 
மாலை் 06-00 முதல் 09-00 வரை

வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு நல்ல நேரம் : 

அக்டோபர் 16 ஞாயிறு 08-00 முதல் 09-00 வரை 
அக்டோபர் 21 வெள்ளி 06-00 முதல் 07-00 வரை

வீடு வாங்குவதற்கு, கிரக பிரவேசம் செய்வதற்கு தொழில் துவங்குவதற்கு :

அக்டோபர் 03 திங்கள் 09-30 முதல் 10-30 வரை 
அக்டோபர் 05 புதன் 09-00 முதல் 10-00 வரை 
அக்டோபர் 06 வியாழன் 09-00 முதல் 10-00 வரை 
அக்டோபர் 19 புதன் 05-00 முதல் 06-00 வரை 
அக்டோபர் 28 வெள்ளி 04-00 முதல் 05-00 வரை

ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . ! 
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம் 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''