Friday, October 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் அம்பலத்தாடுவானுக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் - 14.10.2016

னைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு ஆவணி சதுர்த்தசி திருநீராட்டல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.

"ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே."

பொருள்: 

எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும் நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின் நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்; எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடுபேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்.

"அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியினதும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர்சுவாமியினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'