Saturday, May 12, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல வினைகள் யாவும் போக்கும் சனி பிரதோஷம் ! ! ! 12.05.2018


சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. 20 வகையான பிரதோஷ விரதங்கள் இருக்கின்றன.

சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. 20 வகையான பிரதோஷ விரதங்கள் இருக்கின்றன.

சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். அதுவும் அன்றைய தினம் பிரதோஷம் வந்து விட்டால், அதன் சிறப்பு அற்புதமானதாகும். சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள், சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில், வில்வ இலையை அர்ச்சனைக்குக் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி (சந்திரன்) மட்டுமல்ல உங்கள் மதியும் (புத்தியும்) நன்றாக அமையும்.

பிரதோஷங்களில் 20 வகை இருக்கின்றன. அவை: தினசரி பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம், மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரபா பிரதோஷம், அஷ்ட திக் பிரதோஷம், நவக்கிரகப் பிரதோஷம், துத்தப் பிரதோஷம்.

இந்தப் பிரதோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். 

மகா பிரதோஷம்

ஈசன் ஆலகால விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்த பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படுகிறது. அன்றையதினம் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது சிறப்பு. மாசி மாத மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷமும், ‘மகா பிரதோஷம்’ எனப்படும். 

அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால், அதற்கு ‘அர்த்தநாரி பிரதோஷம்’ என்று பெயர். அந்த நாட்களில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். மேலும் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

தீபப் பிரதோஷம்

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங் களைத் தீபங்களால் அலங்கரித்து வழிபடுவதற்கு ‘தீபப் பிரதோஷம்’ என்று பெயர். இந்த பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், இறையருளால் சொந்த வீடு அமையும். 

அபயப் பிரதோஷம்

வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டம், ‘சப்தரிஷி மண் டலம்’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதி யில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதற்கு ‘அபயப் பிரதோஷம்’ அல்லது ‘சப்தரிஷி பிரதோஷம்’ என்று பெயர். 

திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ் வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வ ஜென்ம வினை முழுவதும் நீங்கும். 

தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார் களோ, அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 

ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை, `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும். 

மாதப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே ‘மாதப் பிரதோஷம்’ ஆகும். இந்தத் திதியின் போது மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தம பலனைத் தரும். 

திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால், அது ‘திரிகரண பிரதோஷம்’ எனப்படும். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமி களுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 

பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது திரயோதசி திதி. இந்தத் திதியே ‘பட்சப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம்) செய்வது நல்லது. அதாவது மயிலாப்பூர், மயிலாடுதுறை ஆகிய திருத்தலங்களில் உள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும். 

உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங் களின் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் ‘உத்தம மகா பிரதோஷம்’ என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறப்பும், கீர்த்தியும் பெற்ற தினமாகும். 

துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பிரதோஷ வழிபாடு இது வாகும். ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவதைத் தான் ‘துத்தப் பிரதோஷம்’ என் கிறார்கள். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும் என்கிறார்கள். 

அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ‘அட்சரப் பிரதோஷம்’ ஆகும். தாருகா வனத்து ரிஷிகள்`நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர். 

நட்சத்திரப் பிரதோஷம்

பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை வழிபடுவது ‘நட்சத்திரப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளில் மாலை வேளையான பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 

அஷ்டதிக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை ‘அஷ்டதிக் பிரதோஷம்’ என்கிறார்கள். இந்த எட்டு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து, நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள். 

நவக்கிரக பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது ‘நவக்கிரகப் பிரதோஷம்’ ஆகும். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும். 

பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் ‘பூரண பிரதோஷம்’ ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வதுஉத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள். 

கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத் திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் ‘கந்தப் பிரதோஷம்’. இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத் துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிடைக்கும். 

சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம். 

பிரம்ம பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அதற்கு ‘பிரம்மப் பிரதோஷம்’ என்று பெயர். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'