Tuesday, February 18, 2014

திருவெண்காட்டில் சங்கடகர சதுர்த்தி .....(18.2.2014)

இன்று (18.2.2014)
மாசி 6 ஆம் நாள்
நம் சங்கடங்களை தீர்க்கும் ஆனை முக கடவுளின் சங்கடகர சதுர்த்தி பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடகர சதுர்த்தி’ என்பர்.

சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடகர சதுர்த்தி எனப்படுகிறது. கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான்.
இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு ‘சங்கடகர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன்’ என்றருளினார் என்கிறது புராண தகவல். ஆகவே சங்கடகரசதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
சங்கடகர சதுர்த்தி அன்று நாம் துதிக்க வேண்டிய கணேஷரின் ஸ்த்திரம்
  • ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச
  • ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
  • பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே
  • ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
  • த்ருதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
  • ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
  • ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
  • நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
  • ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
  • த்வாதஸைதானி நாமானித்ரி ஸந்த்யம்ய: படேந்நர:
  • நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
  • வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
  • புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம்
  • ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத்
  • ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
  • அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத்
  • தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத:
  • ஸம்பூர்ணம்