Saturday, April 19, 2014

திருவெண்காட்டில் சங்கட ஹர சதுர்த்தி ! ! ! (18.04.2014)


சங்கட ஹர சதுர்த்தி

---------------------------------


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.






சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும். சதுர் எனும் வடமொழிச் சொல் நான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் நான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் நான்காம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் நான்காம் நாளுமாக இரண்டு முறை சதுர்த்தித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தியைச் சுக்கில பட்சச் சதுர்த்தி என்றும், பூரணையை அடுத்த சதுர்த்தியைக் கிருட்ண பட்சச் சதுர்த்தி என்றும் அழைக்கின்றனர்.


வானியல் விளக்கம்
----------------------------
சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] சதுர்த்தித் திதி நான்காவது திதியும் 19 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 36 பாகையில் இருந்து 48 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சச் சதுர்த்தித் திதியும், 216 பாகையிலிருந்து 228 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சச் சதுர்த்தியும் ஆகும்.


ஓம் கம் கணபதயே நமஹ...!!