Friday, August 8, 2014

திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களையும் தரும் பிரதோச விரத வழிபாடு ! ! ! 08.08.2014


இறை வழிபாடு குறைகளை நீக்கி நிறைவு தரும். முக்கியமாக புண்ணிய நாட்களில் இறைவனை வழிபடுவது பெரும் பயன் தரும். காலத்திற்கு அதிக வலிமையுண்டு. காலமறிந்து ஒரு தர்மம் செய்தால் ஞால முழுவதும் நமது வசமாகும். காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும்.

இறைவனை எப்போதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால்-ஜபம் செய்தால்-ஒன்றுக்குக்கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும்.
திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத  ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி


சோம வாரம், பிரதோஷம், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, சூர்ய சந்திர கிரகண காலங்கள், திருவாதிரை முதலிய புண்ணிய நாட்களில் அன்புடன் இறை வழிபாடு புரிபவர்கள் பாவங்களினின்றும் நீக்கி, புண்ணியம் பெற்று இகம், பரம், வீடு என்ற மும்மை நலங்களையும் எளிதில் பெறுவார்கள். விரத நாட்களில் உண்ணாது நோன்பிருந்து ஆலய வழிபாடு செய்து திருமுறைகளாய் ஓதி, திருவைந்தெழுத்தை ஜபிக்க வேண்டும்
.
1, ஆலய வழிபாடு – உடல் நலமும். 2, திருமுறைகள் ஓதுவது – வாக்கு நலமும். 3, பஞ்சாட்சர ஜபம் - மன தெளிவு. தந்து நம்மைக் காக்கும்; வினைகள் விலகும்; அருளாற்றல் உண்டாகும். மார்க்கண்டேயர் சிவ வழிபாடு செய்து காலனை வென்று வீடு பேறு பெற்றார்.


திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும்    ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மை சமேத  ஸ்ரீ காசிவிஸ்வநாதர்





தேவர்களும் அசுரர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துப் போர் புரிவார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணிய தேவர்கள் நரை, திரை, மூப்பு, மரணம் என்ற துன்பங்கள் இன்றி வாழ விரும்பினார்கள். இவை அணுகாமல் வாழ வேண்டுமானால் சிவ மூர்த்தியை வேண்டினால் இறைவன் ஒரு சொல்லால் இவற்றை அருள்வான்.

இந்த சுருக்கமான நெறியை அறியாத தேவர்கள் பிரமதேவனிடம் சென்று தங்கள் கருத்தை அறிவித்தார்கள். பிரம்மதேவர், தேவர்களுடன் திருமாலிடம் சென்று, சாவா மூவா நலம் பெற என்ன வழி?” என்று வினவினார்.

திருமால், “ திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்டால் மரணமின்றி எப்போதும் இளமையுடன் வாழலாம். “ என்று ஆலோசனை கூறினார்.

இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள்.மந்திரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தம் முதுகில் தாங்கினார். அசுரர்கள் வாசுகியின் தலைப்புறமும், தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள்.

அந்த நாள் தசம திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி. பதினோராவது திதி.



இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !

இன்று 8-8-2014 பிரதோஷம் சிவாலயம் செல்ல மறவாதிர்கள்! 

நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயமே ! 


பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஸரஸ்வதி தோன்றினால் பிரம்மா அவர்களை அழைத்துக்கொண்டார், மஹாலக்ஷ்மியை விஷ்னுவும், தொடர்ந்து கற்ப்பக விருக்ஷம், காமதேனு, ஐராவதம், இவ்விதமான பொருட்கள் பார்கடலில் இருந்து தோன்றின அவைகளை தேவேந்திரன் எடுத்துக்கொண்டான் அனைவரும் அமிருதத்திற்காக காத்துகொண்டிருந்த வேளையில் வாசுகி பலம் தாங்காமல் பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. அந்த சமயத்தில் பாற்கடலில் அமிருதம் வராமல் விஷம் வர ஆரம்பித்தது.

வாசுகி கக்கிய ஆலமும் {ஆலம் என்றால் விஷம் என்று பொருள்} கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் என்ற பெயர் பெற்றது.

இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக வெப்பத்துடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டிட. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது; திசைதோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள்.

தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்னுவிடம் பனிய மஹாவிஷ்னு அந்த விஷத்தை அடக்க சென்று வெண்ணிறமாக இருந்த அவர் விஷ வேகத்தால் நீல நிறம் ஆனார். வானவர்கள் அதை பார்த்து மேலும் அஞ்சி திருக்கைலாயம் சென்று அரனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.

தஞ்சம் புகுந்த வானவர்கள், “ தேவ! தேவ! மகாதேவா! அருட்பெருங்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டான்; நாங்கள் அடிமைகள்; நாங்கள் பார்கடல் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது தேவர்களுக்கு உரியது என்று அவைகளை பெற்றுக்கொண்டோம் ஆனால் அமிருதம் வர வேண்டிய தருனத்தில் விஷம் வந்து எங்களை வதைக்கிறது சர்வ உலகமும் அழிந்துவிடும் என அஞ்சுகிறோம் தாங்கள்தான் எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் என வேண்டினர்.


கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகிலிருந்த சுந்தரரைப் பார்த்து, “ சுந்தரா! “ அவ்விடத்தை {விடம் என்றால் விஷம் என்று பொருள்} இவ்விடத்துக்குக் கொண்டு வா” என்று பணித்தருளினார்.

சுந்தரர் மாலயனாதி வனவர்களால் கூட அணுக முடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை இறைவன் அருளால் நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். அதனாலயே சுந்தரருக்கு ஆலால சுந்தரர் என்று பெயர் வழங்காளாயிற்று.

இறைவன் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டருளினார். அந்த விஷம் உள்ளே சென்றால் உள் முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். உமிழ்ந்தால் வெளி முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும் ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் இருக்க கருணையே வடிவமான அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருக்கும் பார்வதி தேவி இறைவன் கண்டத்தில் கை வைத்து மேலேயும் வராமல் கீலேயும் போக விடாமல் தடுத்தாட்கொண்டாள். அதனால் இறைவனுடைய கழுத்தானது நீல நிறமாக மாறி நீல கண்டன் என பெயர் பெற்றார்.

எல்லா உயிர்களும் காப்பாற்ற வேண்டி இறைவன் இந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா?

இறைவன் ஆலகால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம்மா, விஷ்னு, இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிறான் கண்டம் தீர்த்தது என்று நால்வர்கள் போற்றினார்கள்.

இந்த விஷத்தின் வெம்மையால் திருமால் நீல நிறம் பெற்றார். அதற்கு முன்பு அவர் வெண்மை நிறத்துடன் இருந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.

மீண்டும் பாற்கடல் கடைந்தது._ சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அவ்வாறே அமரர்களும், அசுரர்களும் மீண்டும் திருப்பாற் கடலருகில் சென்று முன்போலவே கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

அப்பொழுது பாற்கடலிருந்து கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைஸ்ரவம், என்ற குதிரை முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. ஏனையவைகளை தேவர்கள் அடைந்தார்கள்.

ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் அவர்கள் உறக்கம் இன்றிப் பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அமரர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.

பிரதோஷம்_ மறுநாள் திரியோதசி பதிமூன்றாம் நாள். தேவர்கள் சிவபெருமானை வணங்காமல் பொழுதுபோக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள்.


பரம கருணாநிதியான சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரியத் திருவுளம் கொண்டு கயிலையில் அன்று மாலை { 4-30 மணி முதல் 6 மணி வரை } பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகை காணத் திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதனைத் தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள். அன்று முதல் திரியோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று வழங்கலாயிற்று. { பிரதோஷம் – பாவத்தை போக்கும் நேரம் }

பிரதோஷம் என்ற விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் தலையாயது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் துன்பங்களிலிருந்து நீங்கி இன்பம் எய்துவார்கள் ஆன்றோர்கள் வாக்கு.