மண்டைதீவு-திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாருக்கு அவணி சதுர்த்தி விரத அனுஸ்டான சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு
விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம்.
விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம்.
கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூத முனிவரால் பஞ்ச பாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கெளரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.
அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அனுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.
தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப் பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.
இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அனுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.