Saturday, October 3, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வரலாற்றுப் புகழ்பாடும் “ஓங்காரநாதம்” இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு 20.08.2015 ( படங்கள், வீடியோ இணைப்பு )


இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.


இங்கு திருவெண்காடு என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரின் வரலாற்றுச்சிறப்புக்களை பாடல்வரிகளாக்கி 20.08.2015 எம் பெருமானின் மன்மத வருட மகோற்சவ கொடியேற்ற தினத்தில் அன்று ஆலய மண்டபத்தில் "ஓங்காரநாதம்" என்ற இறுவெட்டு வெளியிடப்பட்டது.


திருவெண்காடு சித்திவிநாயகரின் புகழ் போற்றி வெளியிடப்பட்ட "ஓங்கார நாதம்" என்ற இறுவெட்டுக்கான பாடல் வரிகளை எழுதியமைக்காக எம் பெருமானின் திருவருள் துணைகொண்டு ஆலய தர்மகர்த்தாக்களினால் நயினை மண்ணின் மைந்தன் T.S.M நவரூபன்( நயினை அன்னைமகன்) அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக "பாலகவிஞன்" என்ற பட்டம் வழங்கப்பட்டு அவரது பெற்றோர்களின் கையில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மகோற்சவ குருமணி சிவஸ்ரீ மகா பிரபாகரக்குருக்கள் முடி பிள்ளையார் கோவில் - வேலணை அவர்களாலும் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தான குருமணி கைலாச வாமதேவக்குருக்களின் மைந்தன் கைலாச வாமதேவ ராஐ் குருக்கள் அவர்களாலும் குரு நல்லாசி வழங்கப்பட்டது.


 "ஓங்காரநாதம்" இறுவெட்டு வெளியிட்டு நிகழ்வின் வீடியோ பதிவு  


ஸ்ரீ சித்திவிநாயகர் திருவருட்பாடல்கள் " ஓங்காரநாதம் " இறுவெட்டு கலைஞர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதுடன்

இவ் நிகழ்வினைத் தலைமைதாங்கி சிறப்பித்த வலம்புரி நாளிதள் ஆசிரியர் திரு விஐயசுந்தரம் அவர்களுக்கும் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்த எம் பெருமான் மெய்யடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெருவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம்.
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
ஆலய தர்மகர்த்தாக்கள்
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்