இலங்கை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானுக்கு பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி விழா இம் முறை புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துடன் எதிர் வரும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 19ம் நாள் (04.09.2016) ஞாயிற்றுக் கிழமை அத்த நட்சத்திரமும் கன்னி லக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தல் காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஐகோபுரத்துக்கும் குடமுழுக்கு வைபவம் நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
திருவெண்காடு புண்ணிய பதியும் மண்டைதீவு கிராமமும் விழாக்கோலம் காணவிருக்கும் இப்புனித நன்நாளில் வெண்காட்டுப் பெருமானின் குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு வாயாரப் பாடி மனதார நினைந்து ஆனந்த கண்ணீர் சொரிந்து வாழ்நாளில் இன்பம் காண விரும்பும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு எம் பெருமானின் பெருங் கருணைக்கு பாத்திரமாகி பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக !
எல்லாம் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் க்ருபை
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் திருவெண்காடுறைப் பிள்ளையைப் பேணுவாம்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - யாழ்ப்பாணம் இலங்கை.
பாலஸ்தாபனம்
திருவெண்காட்டு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு எதிர்வரும் வைகாசி
மாதம் 26ம் நாள் (08.06.2016) புதன்கிழமை அதிகாலை 5:52 தொடக்கம் 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
குறிப்பு - சித்திவிநாயகப் பெருமான் மீது தீராத பக்தியும் அன்பும் காதலும் கொண்ட புலம் பெயர்வாழ் மெய்யடியார்கள் அனைவரும் உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம்பெருமானின் குடமுழுக்கு காட்சியை கண்டு ஆனந்தமடைவீர்களாக !
இங்ஙனம்.
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
ஆலய தர்மகர்த்தாக்கள்
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் இலங்கை
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'