
108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்
வரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.
இந்த நாளில் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி இந்த மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்
இந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
- தொழில் மேன்மை அடையும்.
- கடன் பிரச்சனை தீரும்.
- திருமணம் தடை நீங்கும்.
- குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- நோய் நொடிகள் நீங்கும்.
- ஆனந்த வாழ்வழிக்கும்.
- போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.
நாமும் இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு செய்து நன்மைகள் பெறுவோம்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'