
வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படும் பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும்.
அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும்பிரதோஷம் "ருண விமோசன பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது.
வாழ்வில் கடன் சுமையில் மீளமுடியா நிலையில் உழன்று கொண்டிருப்பவர்கள், வருமானத்திற்கு மீறிய கடன் சுமை உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டபடியே முயற்சியை மேற்கொண்டால் இறைவனும் நம்முடன் கலந்து கொண்டு கடன் தீரும் வகையில் நம்மை வழி நடத்துவார்.
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்யவேண்டும்.
மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு! இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.
எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்!
மேலும் பிரதோஷ வேளையில் நாம் உச்சரிக்க வேண்டிய பஞ்சாட்சர மந்திரம்.."ஓம் நமசிவாய"
இம்மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்..
01.நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.
02. உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
03 . குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.
04. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.
05. மோட்சத்தை அளிக்க கூடியது இம்மந்திரம்..
இவ்வளவு நல்ல பலன்களை அளிக்கும் சிவ பஞ்சாட்சர மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து சிவனின் அருளுக்கு பாத்திரமாவோம்..
ஓம் கம் கணபதயே நமஹ...!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'