வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (ஐய வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 30.08.2014 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் சிறப்பாக நடை பெற எம் பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.
சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே! அனைவரும் ஆச்சார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின் அபிஷேக, அலங்கார, தீபாராதனை, திருவீதியுலாகளில் கலந்துகொண்டு அவனது திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
பத்து தினங்களும் விசேட நாதேஸ்வர தவில் கச்சேரியும் ஆலய அமுதசுரபி அன்னதான மடத்தில் அன்னதானமும் இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரை சமய சொற்பொழிவும் இடம்பெறும்.
தெளிவாக notes இனை பார்வையிட கீழே உள்ள link இனை அழுத்தவும்.
குறிப்பு :
அடியவர்கள் தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி சித்திவிநாயகப்பெருமானின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
இங்கனம்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் ( இந்திரன் )
தர்மகர்த்தாக்கள்.
மற்றும் மகோற்சவ உபயகாரர்கள்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்.