Monday, January 25, 2016

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 25.01.2016 (படங்கள் இணைப்பு)


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம்.  இவ் வருடம் (2016) ஆவணி மாதம் சித்திவிநாயப் பெருமானின் பஞ்சதள இராஐகோபுர மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நடைபெற இருப்பதனால்

இப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய உழைப்பும் சேர விரும்பும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.


பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

இராஐ கோபுரத்திருப்பணிகள் முழுமைபெற . . .

பொம்மைகள் அமைத்தல்
வர்ணம் பூசுதல்

ஆகிய வேலைப்பாடுகள் இருக்கின்றன.

குறிப்பு ; - திருவெண்காட்டுப் பெருமானின் குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு வாயாரப் பாடி மனதார நினைந்து ஆனந்த கண்ணீர் சொரிந்து வாழ்நாளில் இன்பம் காண விரும்பும் புலம் பெயர் சித்தி விநாயகப் பெருமான் மெய்யடியார்கள்  உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம் பெருமானின் குடமுழுக்கு காட்சியை கண்டு களித்து பேரானந்த பெருவாழ்வு வாழ்வீராக ! 

சுபம்


படங்கள் : லக்கீஷன் - திருவெண்காடு மண்டைதீவு


















ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'