Friday, December 15, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் குலமுறை தழைத்தோங்க பிரதோச வழிபாடு ! ! ! 15.12.2017


பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதோஷக் காலம்


மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த கால வேளையே பிரதோச வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோச காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

பிரதோச வகைகள்


பிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன,.
  • 1.தினசரி பிரதோஷம்
  • 2.பட்சப் பிரதோஷம்
  • 3. மாசப் பிரதோஷம்
  • 4. நட்சத்திரப் பிரதோஷம்
  • 5. பூரண பிரதோஷம்
  • 6. திவ்யப் பிரதோஷம்
  • 7.தீபப் பிரதோஷம்
  • 8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
  • 9. மகா பிரதோஷம்
  • 10. உத்தம மகா பிரதோஷம்
  • 11. ஏகாட்சர பிரதோஷம்
  • 12. அர்த்தநாரி பிரதோஷம்
  • 13. திரிகரண பிரதோஷம்
  • 14. பிரம்மப் பிரதோஷம்
  • 15. அட்சரப் பிரதோஷம்
  • 16. கந்தப் பிரதோஷம்
  • 17. சட்ஜ பிரபா பிரதோஷம்
  • 18. அஷ்ட திக் பிரதோஷம்
  • 19. நவக்கிரகப் பிரதோஷம்
  • 20. துத்தப் பிரதோஷம்
திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோம சூக்தப் பிரதட்சணம்


சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசக் காலங்களில் வலம் வருகிறார்கள்.

திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்

  1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
  2. பழங்கள் - விளைச்சல் பெருகும்
  3. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
  4. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
  5. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
  6. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
  7. எண்ணெய் - சுகவாழ்வு
  8. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
  9. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  10. தயிர் - பல வளமும் உண்டாகும்
  11. நெய் - முக்தி பேறு கிட்டும்

பிரதோசம் தொகுப்பு தொடரும் . . . 


"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


சிவன் அருள் பெறுவோமாக " !!

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'