"கலையாத கல்வியும், குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய
நின்பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும்
மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாய்...! அபிராமியே..!!"
நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இலங்கை, இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, (09-10-2018) ஆரம்பமாகி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.