
யாழ்ப்பாணம் மண்டைதீவில் புகழ்பெற்ற திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பொற்சபை பொன்னம்பலத்தில் ஆனந்தநடராஐ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.
தேவ தேவனாகிய சிவபெருமானது மார்கழித்திருவாதிரைத் திருவிழாவைத் இந்திரன் முதலான தேவர்கள் பலரும் ஒருங்கு கூடி சிறப்பித்தனர் என்பதை "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணிவுடை ஆதிரை நாள் நாராயணனோடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார்வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே" என்று சேந்தனார் பாடிப்பரவுகிறார்.


































