
இன்று 17.2.19ம் தேதி மாசிப் பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். எனவே இன்றையதினம் மறக்காமல், சிவாலயம் சென்று சிவனாரையும் நந்தியையும் தரிசித்து வணங்குங்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய அற்புத வேளை. பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்வது, பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தந்தருளும். சிவனாரின் பரிபூரண அருளைப் பெற்று, ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம் என்பது ஐதீகம்.


































