Friday, May 30, 2014

விக்கினங்களை தீர்க்க வல்ல விநாயகப்பெருமானின் சிறப்பு செய்திகள் ! ! !


* க்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர்,விக்னராஜர், தூமரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.

* சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிடித்து விநாயகரை வழிபடலாம். இதனையே “பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சொலவடையாகக் கூறுவர்.

Thursday, May 29, 2014

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்....



"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

Wednesday, May 28, 2014

காசியில் குளித்தால் பாவம் போகுமா ?


இறைவனும் இறைவியும் ஒரு நாள் வான வீதியில் போகும்போது, காசிக்கு மேலே போக வேண்டியதா இருந்துச்சு. காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து குளிக்கிறதை பார்த்த பார்வதி தேவி, பரமசிவன் கிட்டே, "சுவாமி... இங்கே பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தினமும் பாவம் போகும்னு நம்பி குளிக்கிறாங்க. அப்படியிருக்க இவங்கள்ல நிறைய பேர் இறந்த பிறகு நரகத்துக்கு வர்றமாதிரி எனக்கு தெரியுதே... இவங்க பாவமெல்லாம் போன மாதிரி தெரியலியே... மக்களை இப்படி நாம ஏமாற்றலாமா? இது நியாயமா?" என்று கேட்கிறார்.

Tuesday, May 27, 2014

விநாயகர் தத்துவம் (சீரடி பாபாவின் விளக்கம்)


கணேசரின் யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானைக்கு மேதா சக்தி அதிகம் மேலும் யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கிரகிக்க முடிகின்றது. இறைவன் புகழைக் கேட்பது என்ற ஆன்மீக சாதனையின் முதற்படிக்கு காதுகள் கூர்மையாக இருப்பது அவசியம் யானை புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஓரே மாதிரி எடுத்துக் கொள்கின்றது. தேவையற்றவையை உதறி விடுகின்றது. நல்ல விஷயங்களை மௌனமாக ஏற்றுக்கொள்கின்றது. இவ்வாறு மனித குலத்திற்கு அத்தியாவசியமான பாடங்களை விநாயகர் நமக்கு கற்றுத் தருகிறார்.

Monday, May 26, 2014

திருவெண்காட்டில் பிரதோச விரதம் (26.05.2014)



பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

குரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)


திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும்.

ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்?



சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என  ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? 

Thursday, May 22, 2014

ஸ்ரீ விநாயகர் அவதாரம் ! ! ! (விநாயகர் புராணம் விளக்கும் அவதார ரகசியம்)




*விநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'யானை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒருசேரப் பதிந்தது.


Wednesday, May 21, 2014

திருவெண்காட்டில் தேய்பிறை அஷ்டமி ! ! ! (21.05.2014)


12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.


தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

Monday, May 19, 2014

கணபதியை வழிபடும் முறைக்கு என்ன பெயர் தெரியுமா?


சமயப் பிரிவுகளுக்கு மதம் என்று பெயர். இந்து சமயத்தில் இன்று சைவம், வைணவம் என்று இரு பிரிவுகள் இருந்தாலும், ஒரு காலத்தில் இந்து சமயம் ஆறு பிரிவுகளாக இருந்தது. சிவ மதம்(சைவம்), விஷ்ணு மதம்(வைணவம்),என்பதோடு சக்தியை வழிபடுவோர்(சாக்தம்), முருகனை வழிபடுவோர்(கவுமாரம்), கணபதியை வழிபடுவோர்(கணாபத்யம்) சூரியனை வழிபடுவோர் (சவுரம்)என்று தனிப்பிரிவுகளாக இருந்தனர். கணபதியையே பரம்பொருளாகக் கருதி வழிபடும் முறையே கணாபத்யம்.