Wednesday, November 16, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் நமக்கு வரும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 17.11.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

Monday, November 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இரத்தினசபாபதிக்கு மாபெரும் அந்தஸ்து தரும் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம். 14.11.2016


துன்முகி ஆண்டு ஐப்பசி மாதம் 29ஆம் நாள் (14-11-2016). திங்கள் கிழமை . முழு நிலவுப் பெருநாள் (பௌர்ணமி) . 

சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இவ்வாண்டு வரும் ஐப்பசி மாத முழு நிலவுப் பெருநாள் திங்கட்கிழமை வருவது மிகவும் சிறப்பு . இத்திருநாளில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய நம்மால் இயன்ற பொருளை அருகிலுள்ள ஆலயங்களுக்கு வழங்கி இறைவனை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் கண்டு வணங்கி மகிழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறோம்.

Saturday, November 12, 2016

திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் இன்று சனி மஹா பிரதோஷம் ! ! ! 12.11.2016 🌿🌟🌿


சனி மஹா பிரதோஷ விரதமிருந்து நமது மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அகிலாணடகோடி பிரம்மாண்ட நாயகனாய், கருணைக்கடலாய் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியையும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி அம்பாள்  உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாத மூர்தியையும்  வணங்கி ஐந்து வருடங்கள் சிவ வழிபாடு செய்த பலன்களை பெறலாம்...

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

திருவெண்காடு அமர்ந்த அரசே போற்றி!! 
திருவெண்காடுறைவோன்  போற்றி! போற்றி!!
அருள்மிகு சிவகாம சுந்தரி உடனாய் 
அருள்மிகு நடராஜர் திருவடிகள் போற்றி!
அருள்மிகு  நந்தியம்பெருமான்  திருவடிகள் போற்றி!  போற்றி!

Friday, November 11, 2016

பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020


வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல  நன்மை  தீமைகளை வெளிக்காட்டியுள்ளது….

எந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்…

எத்தனை ஆண்டுகள் எப்படி பயணிக்கப் போகிறது…

Wednesday, November 2, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 03.11.2016


அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

Monday, October 31, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 31.10.2016 - 05.11.2016


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

Friday, October 28, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல தீபாவளி வழிபாடு ! ! ! 29.10.2016


தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி,  இருள் நீக்கி,  ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். 

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.

இந்த தீபாவளி திருநாளில் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் இந்நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த நாள் தான் தீபாவளி…

Wednesday, October 26, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த பிரதோஷ வழிபாடு ! ! ! 27.10.2016



பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

Tuesday, October 18, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகர சதர்த்தி ! ! ! 19.10.2016


விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

Friday, October 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் அம்பலத்தாடுவானுக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் - 14.10.2016

அனைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு ஆவணி சதுர்த்தசி திருநீராட்டல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.