பஞ்ச தள இராஜ கோபுர திருப்பணி வேலைகள்

Monday, July 8, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று ஆனந்த நடராஐமூர்த்திக்கு இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! (08.07.2019) படங்கள் இணைப்பு


னி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 08.07.2019 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Friday, July 5, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நடாத்தும் ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! 08.07.019


வேனிற் காலம், ஆனி இலை அசங்க' என்பதற்கு ஏற்ப அவ்வப்போது மழை பொழியும் இதமான நாட்கள் தொடங்கும் மாதமாகத்தான் ஆனி மாதத்தை நமது முன்னோர்கள் வர்ணிப்பார்கள். ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். இந்த ஆனி உத்திரமே, ஆடலசரனுக்கான ஆனி திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது.

Saturday, June 29, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு ! ! ! 30.06.2019


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Thursday, June 27, 2019

ஆனி உத்தர திருமஞ்சன உற்சவ அழைப்பிதழ் - 08.07.2019


னித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்பது அருளாளர்களின் வாக்கு.

ஆனித் திருமஞ்சனம் தரிசித்தால் 
வாழ்வில் பேறுகள் பல பெறலாம்.

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன்கள் கிட்டும் என்பது, அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.

Thursday, June 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி ! ! ! 20.06.2019


ங்கடஹர சதுர்த்தி நன்னாளில், கணபதியை வழிபடுவோம். கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான். இன்று  குருவார சங்கடஹர சதுர்த்தி 

விநாயகப் பெருமானுக்குரிய ஒரு சிறப்பான தினமாக ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் வருகிறது. இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Thursday, June 13, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சுபிட்சம் அருளும் சுக்கிரவாரப் பிரதோஷம் ! ! ! 14.06.2019


சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. 14 ம் தேதி சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி.

சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிச்க்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே... பிரதோஷ பூஜை! இந்த நாளில்.. சுக்கிரவாரம் என்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

Tuesday, May 21, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 22.05.2019ஒரு நாளில் ஒரு வேளை திருவெண்காட்டில் உறையும்

சித்தி விநாயகனை நினைத்துவிடு

உயிர்கள் யாவும் உந்தனது சொந்தம் என கருதிவிடு

நீயும் இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழ விடு...


இந்த எண்ணம் உனக்கிருந்தால்

திரு அருள் துணை இருக்கும்

தினம் தினம் மனம் துதிக்கும்

அவன் அருள் நலம் சேர்க்கும்


பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு . . .

Thursday, May 16, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வையகத்தில் நல்ல வாழ்க்கை அமையும் வைகாசி விசாக திருநாள் ! ! ! 18.05.2019


நாளை மறுதினம் வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். 

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

Friday, April 19, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம் ! ! ! 19.04.2019


பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

Saturday, April 13, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விகாரி வருடப்பிறப்பு புண்ணிய கால சிறப்பு வழிபாடு !!! 14.04.2019


ங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019-ல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.

விகாரி வருடத்திய பலன் வெண்பா

“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்

பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்

தியவுடமை விற்றுண்பார் தேர்”