Friday, December 29, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியனுக்கு திருவெம்பாவை நோன்பு ! ! ! 2017


அருள் வடிவானது இறை, அன்பின் திருஉருவம் இறை, சிந்திக்குந்தோறும் தெவிட்டாத அமுது இறை. இந்த இறையை ஏத்தி வழிபடுவதுதான் மானிடப் பிறவியின் உயர்வு ஏற்றம் எல்லாம். அதுவும், மகளிர் வழிபாடே தனி. இறையை சக்தியாகப் பார்க்கின்ற பொழுது தமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை மகளிர் உணர்கின்றார்கள். இந்த உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த ஒளிக்கதிர்தான் திருவெம்பாவை.

Friday, December 15, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் குலமுறை தழைத்தோங்க பிரதோச வழிபாடு ! ! ! 15.12.2017


பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதோஷக் காலம்


மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த கால வேளையே பிரதோச வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோச காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

Monday, December 4, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் ! 04.12.2017 - 24.12.2017


உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (04) முதல் ஆரம்பமாகின்றது.

விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர். 

யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன்றுமுளர். மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும், சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.

Saturday, December 2, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் இருளை போக்கி மெஞ்ஞானம் தரும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா ! ! ! 02.12.2017

கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள் ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம். இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.


“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, 
ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய், 
கோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு, 
வானாகி நின்றானை என்சொல்லி வாழ்த்துவேனே” 

Tuesday, November 28, 2017

தர்ம சாஸ்தாவின் பதினெட்டு ( 18 ) படிகளும் உணர்த்தும் தத்துவ விளக்கங்கள் - சிறப்புக்கட்டுரை ! ! !


சாமியே சரணம் ஐயப்பா  (18 படிகள் உணர்த்தும் தத்துவம்)

******முன்னுரை*****

சத்ய படிகட்டுகள் ஆகிய பதினெட்டு படிகளின் மகத்துவம், தத்துவம்,பதினெட்டு படிகளில் பக்தர்களுக்கு அருள்புரிய இறைவன் இவற்றை காணலாம்.

******மகத்துவம்******

சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள்.இந்த பூமியில் பிறந்த மானுடர்கள் அனைவரும் சத்ய படிகட்டுகளை பார்க்க முடியாது,தொட முடியாது,ஏறி ஐயனை தரிசிக்க முடியாது.இந்த ஒரு மண்டலம் விரதம் இருந்து உடல்,மனம்,ஆன்மா தூய்மை செய்தது இந்த சத்யா படிகட்டுகளில் ஏறி ஐயனை தரிசிக்க தான்.

பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் எனில் அதற்கு ஒரு அதிஷ்டம் சேர்ந்த இறை அருள் இருக்க வேண்டும்.இதை அறிந்து பொண்ணு பதினெட்டு படிகளில் ஏறி ஐயன் ஐயப்பன் அருள் முழுவதும் பெற்ற வேண்டும் என குருசாமிகள் அடிக்கடி கூறுவார்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த 18 படிகளில்...? வாருங்கள் காணலாம்.

Tuesday, November 21, 2017

திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்தம் அருளும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 22.11.2017


விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். 

விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

Friday, November 17, 2017

பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2017


சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 12 ராசிகளுக்கான பலன்கள், எந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Friday, November 3, 2017

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் ராஜபோக வாழ்வு கிட்டும் அன்னாபிஷேக திருநாள் ! ! ! 03.10.2017


நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .

அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னாபிஷேகத் தின் போது, வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.

Monday, October 23, 2017

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நலம் தரும் நாக சதுர்த்தி ! ! ! 23.10.2017


முழுமுதற்கடவுளெனப் போற்றப்படும் ஸ்ரீவிநாயகருக்கு உகந்த நாள் இன்று (23 Oct 2017) . இன்றைய தினம் நாக சதுர்த்தி ஆராதிக்கப்படுகிறது.

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!

ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி , இந்த நாளில் வழிபட்டால் வளம் பெறலாம் என்பது உறுதி.!

Friday, October 20, 2017

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 20.10.2017 - 25.10.2017


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.